business

img

பெட்ரோல், டீசல் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு எடுக்கும்.... பெட்ரோலியத்துறை அமைச்சரே கைவிரித்தார்...

புதுதில்லி:
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகளும் மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை முந்தைய மத்திய அரசு மீது பழியைப்போடு கின்றனர். மத்திய அரசின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து நாடு முழுவதும் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள் தொடர்ந்து பெட்ரோலிய உற்பத்தியை தொடர்ந்து குறைத்து வருகின்றன. உற்பத்தி குறைவால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலைஜிஎஸ்டி வரி வரம்பிற்குள்கொண்டு வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  
ஜிஎஸ்டி கவுன்சில்தான் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கைவிரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;